கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாநகர காவல் துறையின் முக்கிய காவல் நிலையங்களில் ஒன்றான சிங்காநல்லூர் காவல் நிலையத்தின் புதிய ஆய்வாளராக திரு. அர்ஜுன் குமார் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார். காவல் துறையில் தனது அர்ப்பணிப்பு, நேர்மை மற்றும் திறமையான பணியால் சிறப்பாக செயல்பட்டு வரும் அவர், புதிய பொறுப்பிலும் பொதுமக்களின் நம்பிக்கையைப் பெற்று சட்டம் மற்றும் ஒழுங்கை மேலும் வலுப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ள திரு. அர்ஜுன் குமார் அவர்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களையும், அவரது பணிக்காலம் சிறப்பாக அமைய நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சமூக நல்லிணக்கத்திற்காக அவர் மேற்கொள்ளும் பணிகள் வெற்றிகரமாக அமைய வாழ்த்துகிறோம்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்




















