கோவை : கோவை மாநகர காவல் ஆணையாளர் டாக்டர் நா. கண்ணன் அவர்களின் உத்தரவின் பெயரில் துணை ஆணையர் அவர்களின் மேற்பார்வையில் விபத்தில்லா கோவை என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியைE1, சிங்காநல்லூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு, செந்தில்குமார் தலைமையில் விபத் இல்லாமல் வாகனத்தை இயக்குவது, சிக்னலை மதித்து வாகனங்களை இயக்குவது, குறிப்பிட்ட வேகத்தில் இயக்குவது போன்ற நிகழ்ச்சிகளை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் அரசு போக்குவரத்து ஓட்டுநர்களுக்கும், மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு செய்தனர். நிகழ்ச்சியில் உதவி ஆய்வாளர்கள் S. பிரேம்குமார், S மகாலிங்கம். தலைமை காவலர்கள் அருண் மற்றும் சிவக்குமார் போலீஸ் பாலாஜி கலந்து கொண்டனர்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்




















