கோயம்புத்தூர் : கோயம்புத்தூர் மாநகர காவல் துறையின் கீழ் செயல்படும் கவுண்டம்பாளையம் காவல் நிலையத்தின் புதிய ஆய்வாளராக திரு. கந்தசாமி அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார். காவல் துறையில் சிறப்பான பணியாற்றல் மற்றும் பொதுமக்கள் நலன் சார்ந்த அணுகுமுறைக்காக அறியப்படும் அவர், தனது புதிய பொறுப்பிலும் சிறப்பாக செயல்பட்டு சட்டம் மற்றும் ஒழுங்கை மேலும் வலுப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ள திரு. கந்தசாமி அவர்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களையும், அவரது பணிக்காலம் சிறப்பாக அமைய நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். பொதுமக்கள் மற்றும் காவல்துறையினரின் ஒத்துழைப்புடன் கவுண்டம்பாளையம் பகுதியில் அமைதி, பாதுகாப்பு மற்றும் சமூக நல்லிணக்கம் மேலும் மேம்பட வாழ்த்துகிறோம்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்




















