சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படைப் பகுதியின் Flag Officer Commanding Rear Admiral திரு. உபால் குண்டு, VSM, அவர்கள் (11.09.2026) தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படைத் தலைவர், முனைவர் மகேஷ் குமார் அகர்வால், IPS அவர்களை, சென்னை காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் சந்தித்தார். இச்சந்திப்பின்போது, தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பை வலுப்படுத்துதல், மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக, போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா




















