கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி ஜி.எஸ். அனிதா அவர்கள் தலைமையில், காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளினர்களுடன் இன்று (10.09.2026) நடைபெறவுள்ள விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்படும் வழித்தடங்கள் மற்றும் சிலைகள் கரைக்கப்படும் இடங்களை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் தொடர்பாக காவல் அதிகாரிகளுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கியதுடன், விழா அமைதியான மற்றும் பாதுகாப்பான முறையில் நடைபெறுவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். மேலும், பொதுமக்கள் மற்றும் விழா ஒருங்கிணைப்பாளர்கள் காவல்துறையுடன் முழுமையாக ஒத்துழைத்து விழாவை சிறப்பாக நடத்திட வேண்டுமென அறிவுறுத்தினார்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்




















