திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை நீதிமன்றத்தில் நீதிமன்றத்திற்கு வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் செலுத்தும் பணம் கையாடல் செய்யப்பட்டது தொடர்பாக நிலக்கோட்டை நீதிமன்ற பதிவாளர் நிலக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து நிலக்கோட்டை DSP.இளஞ்செழியன் உத்தரவின் பேரில் நிலக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் ஜெயபாண்டி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டதாக நிலக்கோட்டை நீதிமன்றத்தில் பணிபுரியும் ரெக்கார்டு கிளர்க் பட்டிவீரன்பட்டி, அய்யங்கோட்டையை சேர்ந்த மாமுண்டி மகன் அழகர்(43). என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















