திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அரசுபிள்ளைப்பட்டியை சேர்ந்த வேலுச்சாமி, மனைவி கலைச்செல்வி(45). இவர்கள் குடும்ப பிரச்சினை காரணமாக கலைச்செல்வி தனது தந்தை கருப்பணகவுண்டர் வீட்டில் குழந்தைகளுடன் தங்கியிருந்தார். இந்நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு கலைச்செல்வியிடம் கணவர் வேலுச்சாமி தகராறில் ஈடுபட்டார். இதனை கலைச்செல்வியின் தந்தை கருப்பனகவுண்டர் தட்டி கேட்டதற்கு வேலுச்சாமி கத்தியால் குத்தி கொலை செய்தது தொடர்பாக வேலுச்சாமி ஒட்டன்சத்திரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு பழனி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் இன்று நீதிபதி அவர்கள், குற்றவாளி வேலுச்சாமிக்கு ஆயுள் தண்டனை, ரூ.32 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















