சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை உட்கோட்டம்
திருவேகம்பத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் மேற்கொண்ட தீவிர சோதனையில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த காளையார்கோவில் பகுதியைச் சேர்ந்த சுப்பையா (43) மற்றும் குமாரவேலூர் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (56). ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். சோதனையின் போது 159 பாக்கெட் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குற்றவாளிகள் மீது COTPA Act-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















