சிவகங்கை: காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு பராமரிக்கப்பட்டு வரும் முத்துமணி (29). என்பவர் மீது பல்வேறு குற்ற வழக்குகளில் நீதிமன்றம் பிறப்பித்த 5 பிடியானைகள் (NBW) நிலுவையில் இருந்தன. போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு 5 பிடியானைகளையும் நிறைவேற்றி முத்துமணியை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறப்பாக செயல்பட்ட காரைக்குடி வடக்கு காவல் நிலைய போலீசாரை சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா, இ.கா.ப., பாராட்டினார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















