சிவகங்கை: தேவகோட்டை தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போலீசார் மேற்கொண்ட தீவிர சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட விக்னேஸ்வரன் (26). மனோஜ் குமார் (25). மற்றும் ஸ்ரீகாந்த்(25). ஆகிய மூன்று குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். சோதனையின் போது 57 பாக்கெட் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குற்றவாளிகள் மீது COTPA Act ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இராமநாதபுரத்தில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. அக்பர் அலி




















