சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மேற்கொண்ட சோதனையில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த முருகன் என்பவர் காரைக்குடி உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ஆஷீஸ் புனியா (இ.கா.ப) அவர்கள் மேற்பார்வையில் காரைக்குடி தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் தலைமையில் சார்பு ஆய்வாளர் சபிதா முன்னிலையில் தலைமை நிலை காவலர் ஆரோக்கிய பிரசாத் மற்றும் ஏனைய காவலர்கள் சேர்ந்து முருகன் அவர்களை கைது செய்தனர். அவரிடமிருந்து சுமார் 6 கிலோ எடையிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















