திண்டுக்கல்: திண்டுக்கல், வடமதுரை அருகே (17). வயது கல்லுாரி மாணவி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உடல் நலக்குறைவால் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் பரிசோதனையில் மாணவி 7 மாத கர்ப்பமாக இருந்ததால் உள்ளூரில கருக்கலைப்புக்கு முயன்றதில் உடல்நிலை பாதித்தது தெரிந்தது. பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மாணவி இறந்தார். வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் DNA பரிசோதனை மூலம் உறவினரான குளத்துப்பட்டியை சேர்ந்த வினோத்குமார் (34). என உறுதியானது. இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வினோத்குமாரை கைது செய்தனர்.




















