திண்டுக்கல்: திண்டுக்கல் சிறுமலை வன சரக வன அலுவலர் சுரேஷ் அவர்களுக்கு கிடைத்த தகவலின்படி சிறுமலை வனத்துறையினர் கொடைரோடு அருகே கொடைரோடு பிரிவு, சடையாண்டிபுரம் ஆகிய பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது ஒரு தட்டு கிராமத்தைச் சேர்ந்த ஆரோக்கியசாமி(41). என்பவர் வனப்பகுதியில் காட்டுப்பன்றியை வேட்டையாடி வீட்டில் சிறு சிறு துண்டுகளாக வெட்டி சமைத்தது தெரியவந்ததை தொடர்ந்து வனத்துறையினர் ஆரோக்கியசாமியை கைது செய்து அவரிடமிருந்து காட்டுப்பன்றி கறிகளை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















