திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த அத்திவலசு, கோட்டத்துறை, கீரனூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் ஆடு திருட்டு சம்பவங்கள் நடைபெற்றது தொடர்பாக கீரனூர் காவல் நிலையத்தில் புகார்கள் வந்தன. இது குறித்து கீரனூர் காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலம் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட கோரிக்கடவு பகுதியை சேர்ந்த சபரி உள்ளிட்ட 4 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து பைக், கார், ஆடு ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















