திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அடிவாரம் காவல் நிலைய ஆய்வாளர் கவிதா தலைமையில் சன்னதி வீதியில் உள்ள கடை உரிமையாளர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு குழு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிசிடிவி கேமரா பொருத்துவதன் அவசியம் குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், போதைப்பொருள் ஒழிப்பு குறித்தும் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















