பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்த இரண்டாம் நிலை காவலர் திருமால், (02.05.2026) அன்று ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் தனது மனைவியுடன் உயிரிழந்தார். மருத்துவமனைக்கு சென்று வீடு திரும்பும் போது இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த துயர சம்பவம் காவல்துறையினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த காவலரின் உடலுக்கு பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி. பிரபாகர் அவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும், குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். இறுதி அஞ்சலி நிகழ்வில் காவல் அதிகாரிகள் மற்றும் பல காவல்துறையினர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.



















