கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறையின் மோப்பநாய் படை பிரிவிற்கு நேற்று (11.09.2026) புதியதாக ஒரு மோப்பநாய் கொண்டு வரப்பட்டது.
அந்த மோப்பநாயை கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி ஜி.எஸ். அனிதா அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், அந்த புதிய மோப்பநாய்க்கு “ராயன்” என பெயர்சூட்டி வாழ்த்தினார்.
இந்நிகழ்வில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் மோப்பநாய் படை பிரிவு காவலர்கள் உடனிருந்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்




















