கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் (11.09.2026) அதிகாலை 2.30 மணியளவில் ஓசூர்–தளி சாலையில் அப்பாவு நகர் அருகே உள்ள H.A. Engineering Workshop எதிரில் மூன்று நபர்கள் சந்தேகத்திற்கிடமாக நிற்பதாக அவசர உதவி எண் 100-க்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ரோந்து பணியில் இருந்த தலைமைக் காவலர் ராமு (HC 322) மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை காவலர் அசோக்குமார் (TSP 7713) ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, இருவர் கையில் கட்டிங் மெஷினுடனும், மற்றொருவர் டாடா ஏஸ் வாகனத்திலும் இருந்தது தெரியவந்தது. காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது, கடை முன்பு இருந்த இருவர் தப்பி ஓடினர். வாகனத்தில் இருந்த சதீஷ்குமார் என்பவரை காவல்துறையினர் பிடித்து, டாடா ஏஸ் வாகனத்தையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்




















