கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் (11.09.2026) அதிகாலை சுமார் 01.30 மணியளவில், ஹட்கோ காவல் நிலையம் அருகே அமைந்துள்ள Zyra TVS Showroom-இல் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உள்ளே நுழைய முயன்றார். அப்போது அங்கு வாட்ச்மேனாக பணியாற்றி வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த திரு. சுட்டூ ராஜ்பர் என்பவர் அந்த நபரை கவனித்து பிடித்து, மேலான விசாரணைக்காக ஹட்கோ காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் விழிப்புணர்வுடன் செயல்பட்டு, சந்தேக நபரை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்த திரு. சுட்டூ ராஜ்பர் அவர்களின் செயலை பாராட்டி, கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி ஜி.எஸ். அனிதா அவர்கள் அவரை மாவட்ட காவல் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கி கௌரவித்தார்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ஆண்டனி பாபு




















