பெரம்பலூர்: காவலர் தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில், பணியின்போது வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் V. லலித்குமார், இ.கா.ப., மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து காவலர்கள் உறுதிமொழி ஏற்றனர். காவலர்கள், குடும்பத்தினர் மற்றும் பொதுமக்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.




















