கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மோட்டார் வாகனங்கள் (வாகனம் ஓட்டுதல்) விதிமுறைகள் – 2017 தொடர்பான “சாலை மொழிகள்” விழிப்புணர்வு புத்தகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ச. தினேஷ் குமார், இ.ஆ.ப., அவர்கள் வெளியிட, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி கோ.ச. அனிதா அவர்கள் பெற்றுக் கொண்டார். இப்புத்தகம் மூலம் பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்




















