கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் டவுன் மற்றும் நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட VGP layout , ஒன்னல்வாடி மற்றும் சொக்கநாதபுரம்- கக்கனூர் ரோடு, bagur gate அருகே உள்ள ஜெயம் ஆட்டோ மேக் கம்பெனி கேட் அருகில் ஆகிய இரு வெவ்வேறு இடங்களில் வருவாய் வட்டாட்சியர் அவர்கள் தலைமையில், கிராம நிர்வாக அலுவலர் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது அவ்வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய அனுமதியின்றி கடத்தப்பட்ட சுமார் 8 யூனிட் M-Sand இருந்தது. அனுமதியின்றி M-Sand கடத்திய இரண்டு குற்றவாளிகளை கைது செய்து M-Sand கடத்த பயன்படுத்தப்பட்ட வாகனங்களையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்து, கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து இரண்டு குற்றவாளிகளையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ஆண்டனி பாபு




















