கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் உட்கோட்டம் , ஓசூர் டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் , ஓசூர் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள சப்தகிரி லாட்ஜ் அருகில் சத்யா என்பவர் கடந்த (03.10. 2026) ஆம் தேதி மாலை சுமார் 15.30 மணிக்கு அவருக்கு சொந்தமான துணி கடையில் துணிகளை அடுக்கி கொண்டிருந்த போது அங்கு வந்த குற்றவாளி சத்யாவின் கழுத்தில் இருந்து நகையை பறித்துச் சென்று ஓடிய தாகவும், அப்போது சத்யா சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் எதிரியை பிடித்து காவல் நிலையம் ஆஜராகி சத்யா கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து போலீசார் குற்றவாளியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ஆண்டனி பாபு




















