திண்டுக்கல்: திண்டுக்கல் நாயக்கர்புது தெரு பகுதியை சேர்ந்த வெங்காய வியாபாரி அசோக்குமார்(28). இவரது வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் 3 பவுன் தங்கச் செயின் திருடு போனது தொடர்பாக நகர் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து நகர் DSP.கார்த்திக் உத்தரவின் பேரில் நகர் மேற்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் நாராயணன் மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு அசோக்குமாரிடம் வேலை பார்த்த R.M.காலனியை சேர்ந்த வினோத்(19).மற்றும் (17). வயது சிறுமி ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 3 பவுன் தங்க நகையை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















