திண்டுக்கல்: திண்டுக்கல், பழனி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த (8). வயது சிறுமியை கடந்த 2024-ம் ஆண்டு பாலியல் ரீதியாக துன்புறுத்திய பாலசமுத்திரத்தை சேர்ந்த வீரபத்திரன் (எ)விக்கி(27). என்பவரை பழனி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் இன்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள் வீரபத்திரன்(எ) விக்கிக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா



















