திண்டுக்கல்: திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர்கள் சக்திவேல், மோகனப்பிரியா மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது NGO காலனி முருகன் கோவில் அருகே மற்றும் பெஸ்கி கல்லூரி எதிரே சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது அவர்கள் தாடிக்கொம்புவை சேர்ந்த பூவரசன்(28). NGO.காலனியை சேர்ந்த நாகராஜ்(28). என்றும் அவர்கள் உபயோகப்படுத்துவதற்கு கஞ்சா வைத்திருப்பதும் தெரியவந்ததை தொடர்ந்து போலீசார் 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















