திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பட்டாகத்தியுடன் சுற்றி திரிந்த ரவுண்ட்ரோடு புதூர், ரயில்வே காலனியை சேர்ந்த அஜித்சுரேந்தர்(26). என்பவரை நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனைத்தொடர்ந்து அஜித் சுரேந்தர் நீதிமன்ற பிணை பெற்று வெளியே சென்று நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால் திண்டுக்கல் நீதிமன்றம் பிடியானை பிறப்பித்தது. இது தொடர்பாக நகர் DSP.கார்த்திக் மேற்பார்வையில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வசந்த்குமார், சார்பு ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு தலைமறைவாக இருந்த அஜித்சுரேந்தரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி நீதிமன்ற பிடியாணையை நிறைவேற்றினர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















