மதுரை: மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையில் இளைஞர் நலன் மற்றும் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் இளைஞர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. அலங்காநல்லூரில் அரசு சார்பில் விளையாட்டு மைதானம் அமைத்து இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது. துணைக் காவல் கண்காணிப்பாளர் ஆனந்தராஜ் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி




















