திண்டுக்கல்: திண்டுக்கல் பேருந்து நிலையம் அடுத்த மீனாட்சிபவன் அருகே நடந்து சென்று கொண்டிருந்த தாடிக்கொம்பு காமாட்சிபுரத்தை சேர்ந்த காமாட்சி(28). என்ற பெண் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க செயினை மர்ம நபர் பறிக்க முயற்சி அக்கம் பக்கத்தினர் மர்ம நபரை பிடித்து நகர் வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேற்படி சம்பவம் குறித்து நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வசந்த்குமார் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















