திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், அய்யம்பாளையத்தை சேர்ந்த ராஜபாண்டி(40). என்பவரின் வீட்டின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து 7 பவுன் தங்க நகை, 4 கிலோ வெள்ளி பொருட்கள், 2 குத்துவிளக்குகள் 5பட்டுப்புடவைகள் திருடியது தொடர்பாக பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து நிலக்கோட்டை டிஎஸ்பி இளஞ்செழியன் உத்தரவின் பேரில் பட்டிவீரன்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் முத்துக்குமரன் தலைமையில் சார்பு ஆய்வாளர் வாணி மற்றும் காவலர்கள் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட கௌதம்(26). வீரசுரேந்தர்(21). முத்துகுமார்(21). விஜயகுமார்(24). பெத்தணன்(20). ஆகிய 5 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 1 கிலோ வெள்ளி பொருட்கள், 2 குத்துவிளக்குகள், 4 பட்டு புடவைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















