மதுரை: தென் மண்டல காவல் அதிகாரிகளுக்கான துப்பாக்கிச் சுடும் போட்டி 2026 தென் மண்டல காவல்துறை மூத்த காவல் அதிகாரிகளுக்கான துப்பாக்கிச் சுடும் போட்டி – 2026, மதுரை மாவட்டம் சார்பில் (12.10.2026) மற்றும் (13.10.2026) ஆகிய தேதிகளில் கடவூர் துப்பாக்கிச் சுடும் பயிற்சித் தளத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் பங்கேற்ற காவல் அதிகாரிகளின் துப்பாக்கிச் சுடும் திறன், குறி தவறாத துல்லியம் மற்றும் தொழில்முறை திறன்களை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. மதுரை சரக காவல்துறை துணைத்தலைவர் Dr.அபினவ்குமார், இ.கா.ப., மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நே.தேவநாதன், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அபிஷேக் குப்தா, இ.கா.ப., காவல் சிறப்புப்படை ஆறாம் அணி, மதுரை, தளவாய் திருமதி.மது குமாரி, இ.கா.ப, மற்றும் மதுரை மாநகர ஆயுதப்படை துணை ஆணையாளர் திரு.ஜே.பி.பிரபாகர் ஆகியோர் உட்பட 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் 14 உதவி கண்காணிப்பாளர்கள் / துணைக் கண்காணிப்பாளர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர்.
போட்டிகளின் முடிவுகள்: 1) 9 மி.மீ. பிஸ்டல் / .380 ரிவால்வர் பிரிவு * முதல் பரிசு: திரு.V.அனில் குமார், துணைக்காவல் கண்காணிப்பாளர், சிவகாசி உட்கோட்டம், விருதுநகர் மாவட்டம். இரண்டாம் பரிசு: திரு.அபிஷேக் குப்தா, ஐ.பி.எஸ்., காவல் கண்காணிப்பாளர், சிவகங்கை மாவட்டம். மூன்றாம் பரிசு: திரு.N.கார்த்திக், துணைக் கண்காணிப்பாளர், திண்டுக்கல் உட்கோட்டம், திண்டுக்கல் மாவட்டம். 2) 5.56 மி.மீ. INSAS துப்பாக்கிப் பிரிவு முதல் பரிசு: திருமதி. ஜெ.விஷ்ணு பிரியா, துணைக் கண்காணிப்பாளர், ஆண்டிபட்டி உட்கோட்டம், தேனி மாவட்டம். இரண்டாம் பரிசு: திரு.N.கார்த்திக், துணைக் கண்காணிப்பாளர், திண்டுக்கல் உட்கோட்டம், திண்டுக்கல் மாவட்டம். மூன்றாம் பரிசு: திரு.அபிஷேக் குப்தா, ஐ.பி.எஸ்., காவல் கண்காணிப்பாளர், சிவகங்கை மாவட்டம். 3) ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பிரிவு முதல் பரிசு: திரு.அபிஷேக் குப்தா, ஐ.பி.எஸ்., காவல் கண்காணிப்பாளர், சிவகங்கை மாவட்டம். இரண்டாம் பரிசு: திரு. V.அனில் குமார், துணைக்காவல் கண்காணிப்பாளர், சிவகாசி உட்கோட்டம், விருதுநகர் மாவட்டம். மூன்றாம் பரிசு: திரு.N.கார்த்திக், துணைக் கண்காணிப்பாளர், திண்டுக்கல் உட்கோட்டம், திண்டுக்கல் மாவட்டம். இப்போட்டிகளில் வெற்றி பெற்ற காவல் அதிகாரிகளைப் பாராட்டும் வகையில், தென் மண்டல காவல்துறைத் தலைவர் திரு.விஜயேந்திர பிதாரி, ஐ.பி.எஸ்., அவர்கள் வெற்றி பெற்ற அதிகாரிகளுக்குக் கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார்கள்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்




















