கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திருமதி ஜி.எஸ். அனிதா அவர்களின் தலைமையில், மாவட்டக் காவல் அலுவலகத்தில் மாதாந்திரக் குற்ற ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. வேலுமணி (தலைமையிடம்), கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. நமசிவாயம், (CCW) , காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில், மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகள் குறித்த தற்போதைய நிலை, நிலுவையில் உள்ள வழக்குகளின் விசாரணை முன்னேற்றம், குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு தொடர்பான பணிகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்தவும், குற்றத் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவும், சட்டம்-ஒழுங்கைப் பேணிக்காக்கவும் காவல் அதிகாரிகளுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உரிய அறிவுறுத்தல்களை வழங்கினார். அத்துடன், சிறப்பாகப் பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கௌரவிக்கப்பட்டு, அவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்




















