மதுரை: தமிழ்நாடு மாநில மூத்தோர் தடகள கூட்டமைப்பு சார்பில், (09.10.2026) முதல் (11.10.2026) வரை, ஈரோடு மாவட்டம், வ.உ.சி. பூங்கா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில மூத்தோர் தடகளப் போட்டியில் (Tamil Nadu State Masters Athletics Championship 2026) மதுரை மாவட்டக் காவல் துறையைச் சேர்ந்த காவலர்கள் பங்கேற்று பல பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். மாநிலம் முழுவதிலும் இருந்து பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 1,600-க்கும் மேற்பட்ட மூத்த விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்ட இந்தப் போட்டியில், மதுரை மாவட்டக் காவல் துறையின் சார்பாகப் பங்கேற்ற காவலர்கள் தங்களின் சிறப்பான திறமையை வெளிப்படுத்தினர்.
மதுரை மாவட்ட காவலர்களின் வெற்றி விபரங்கள் திரு. B. சந்துரு, தலைமைக் காவலர் – 100 மீ. ஓட்டம் – தங்கப் பதக்கம் திரு. M. ராஜா, தலைமைக் காவலர் – குண்டு எறிதல் – தங்கப் பதக்கம்; வட்டு எறிதல் – தங்கப் பதக்கம் திரு. R. கார்த்திகேயன், தலைமைக் காவலர் – 400 மீ. தடை தாண்டும் ஓட்டம் – வெண்கலப் பதக்கம் திரு. P. ராஜசேகர், தலைமைக் காவலர் – 400 மீ. ஓட்டம் – வெண்கலப் பதக்கம் திரு. S. பீர் முகமது, தலைமைக் காவலர் – ஈட்டி எறிதல் – தங்கப் பதக்கம்; 4 X 100 மீ. தொடரோட்டம் – வெள்ளிப் பதக்கம். மும்முறை தாண்டுதல் (Triple Jump) – வெள்ளிப் பதக்கம் மாநில அளவில் பதக்கங்களை வென்று மதுரை மாவட்டக் காவல் துறைக்குப் பெருமை சேர்த்த காவலர்களை, மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு. ந. தேவநாதன் அவர்கள் நேரில் அழைத்து தங்களது பாராட்டினைத் தெரிவித்தார்கள்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்




















