திண்டுக்கல்: திண்டுக்கல் பழனி, இடும்பன் கோவில் அலுவலகத்தில் உள்ள பீரோவில் கோவிலுக்கு சொந்தமான 20.1/2 பவுன் தங்க நகைகள், 3 கிலோ வெள்ளி பொருட்களை கடந்த மே மாதம் மர்ம நபர்கள் திருடியதாக கோயில் செயல் அலுவலர் நரசிம்மன் பழனி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவின் பேரில் பழனி நகர் காவல் நிலைய ஆய்வாளர் தங்கமுனியசாமி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு கோயில் அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வந்த பழனி, பாப்பம்பட்டியை சேர்ந்த நிரஞ்சனா மற்றும் அவரது ஆண் நண்பர் நெய்க்காரப்பட்டியை சேர்ந்த பிரபாகரன் ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து 20.1/2 பவுன் தங்க நகைகள், 3 கிலோ வெள்ளி ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா



















