திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடியில் 2012-ம் கொலை வழக்கில் கோவையை சேர்ந்த ஞானசேகரன்(55). உளுந்தூர்பேட்டையை சேர்ந்த சண்முகசுந்தரம்(59), திண்டிவனத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தி(61). ஆகிய 3 பேரை தாண்டிக்குடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு பழனி கூடுதல் மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் தாண்டிக்குடி காவல் நிலைய ஆய்வாளர் பாண்டியம்மாள் நீதிமன்ற காவலர்கள் சுந்தரபாண்டியன், திருக்குமரன் மற்றும் அரசு வழக்கறிஞர் ஆகியோரின் முயற்சியால் இன்று பழனி கூடுதல் மாவட்ட விரைவு நீதிமன்ற நீதிபதி மலர்விழி அவர்கள், 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா 40,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா



















