மதுரை: மதுரை மாவட்டம் சோழவந்தான் தென்கரை வைகை பாலத்தில் தீயணைப்புத்துறை சார்பில் பேரிடர் காலங்களில் பொதுமக்கள் தங்களை தாங்கள் பாதுகாத்துக் கொள்வது குறித்த ஒத்திகை பயிற்சி மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது நிகழ்ச்சியை மதுரை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் கருணாகரன் துவக்கி வைத்தார் இதில்
வாடிப்பட்டி வட்டாட்சியர் சுந்தரவேல் மற்றும் சோழவந்தான் தீயணைப்பு நிலைய அலுவலர் நாகராஜன் வாடிப்பட்டி நிலைய அலுவலர் பாலச்சந்திரன் தலைமையில் தீயணைப்பு துறையினர் மற்றும் வருவாய் ஆய்வாளர் கலையரசன் கிராம நிர்வாக அலுவலர்கள் செந்தில்குமார் ஜெயபிரகாஷ் மற்றும் கிராம உதவியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஒத்திகை நிகழ்ச்சியில் பேரிடர் காலங்களில் குறிப்பாக வெள்ளம் ஏற்படும்போதும் திடீர் தீ விபத்து ஏற்படும் போது இயற்கை பேரிடர்கள் ஏற்படும் போது பொதுமக்கள் தங்களை தாங்கள் பாதுகாத்து கொள்ளும் முறைகள் குறித்து தீயணைப்புத்துறை வீரர்கள் செய்து காண்பித்தார்கள்
தொடர்ந்து பேரிடர் மீட்பு குறித்து கையேடு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது இதில் சோழவந்தான் தென்கரை முள்ளிப்பள்ளம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர். வெள்ளத்தில் அடித்து செல்பவர்களை கயிறு கட்டி மீட்பது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது மேலும் திடீர் தீ விபத்தில் பொதுமக்கள் சிக்கிக் கொள்ளும் போது தப்பித்துக் கொள்வது குறித்து வழிமுறைகள் பொதுமக்களிடம் விளக்கி கூறப்பட்டது வீட்டில் கேஸ் சிலிண்டர் பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி




















