திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், பொன்மாந்துறை ஆத்துமேடு நால்ரோடு பகுதியில் வனத்துறையினர் திடீர் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் வந்த மணிகண்டன் (28). பூபதிராஜா (23). சவரிமுத்து (23). ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இதில், குடகனாற்றில் இறந்து கிடந்த காட்டுப்பன்றியை எடுத்துச் சென்று, சுத்தம் செய்து சமைக்க முயன்றது தெரியவந்தது. அவர்களிடமிருந்து சுமார் 2 கிலோ காட்டுப்பன்றி இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, சிறுமலை வனச்சரகத்தில் வன உயிரினக் குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மூவருக்கும் தலா ரூ.25,000 வீதம் மொத்தம் ரூ.75,000 அபராதம் விதிக்கப்பட்டது. மாவட்ட வன அலுவலர் நாக சதீஷ் கிடிஜாலா அறிவுறுத்தலின்படி, சிறுமலை வனச்சரக அலுவலர் ரா. சுரேஷ் தலைமையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















