திண்டுக்கல்: திண்டுக்கல், தாடிக்கொம்பு அடுத்த காமாட்சிபுரம் பிரிவு அருகே திண்டுக்கல் – கரூர் தேசிய நெடுஞ்சாலையில் கட்டிடங்களுக்கு சிமெண்ட் கலவை கலக்கும் வாகனம் – இருசக்கர வாகனம் மோதி விபத்து இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த வாலிபர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த தாடிக்கொம்பு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வாலிபரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















