திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆய்வு மேற்கொண்டார். மேலும் கொடைக்கானல் மூஞ்சிகல் பகுதியில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நடை ரோந்து பணியை மேற்கொண்டார்.
தொடர்ந்து கொடைக்கானல் பேருந்து நிலைய பணிமனை வளாகத்தில் உள்ள போக்குவரத்து கழகத்திற்கு உட்பட்ட 7 ஏக்கர் காலி இடத்தை நேரில் ஆய்வு செய்தார். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















