கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்த போது பாலக்கோடு – காவேரிப்பட்டிணம் ரோடு, பன்னிஅள்ளி தேவராஜ் ஜூஸ் ஃபேக்டரிக்கு செல்லும் பிரிவு ரோடு அருகே கஞ்சா கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று சோதனை செய்ததில் சட்ட விரோதமாக வெளி மாநிலத்திலிருந்து கடத்திவரப்பட்ட சுமார் 30 கிலோ கஞ்சா இருந்தது. சட்டவிரோதமாக கஞ்சா கடத்திய நான்கு நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து வழக்குப்பதிந்து நான்கு குற்றவாளிகளையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ஆண்டனி பாபு




















