திண்டுக்கல்: திண்டுக்கல், ஒட்டன்சத்திரத்தை அடுத்த கள்ளிமந்தயம் பகுதியில் மில்லில் வேலை பார்க்கும் வட மாநில இளைஞர் கொரியர் மூலம் கஞ்சா சாக்லேட்களை கடத்தி வந்து விற்பனை செய்வதாக திண்டுக்கல் மாவட்ட S.P.ஜெயக்குமார் அவர்களுக்கு கிடைத்த தகவலின்படி கள்ளிமந்தயம் காவல் நிலைய ஆய்வாளர் மணியன் சார்பு ஆய்வாளர் திருமலைசாமி மற்றும் காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது கள்ளிமந்தயத்தை அடுத்த வாகரை பகுதியில் வடமாநிலங்களில் இருந்து கொரியர் மூலம் கஞ்சா கடத்தி வந்து அப்பகுதியில் மில்லில் வேலை பார்த்துக் கொண்டு விற்பனை செய்த புதுடெல்லியை சேர்ந்த முகமதுசாஜித்(22). என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 2.7 கிலோ கஞ்சா சாக்லேட்டை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















