இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் நடைபெற உள்ள முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி. சந்தீஷ் ஐபிஎஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதன் ஒரு பகுதியாக, கீழக்கரை 500 பிளாட், ஏர்வாடி சந்திப்பு மற்றும் காஞ்சிரங்குடி ஆகிய பகுதிகளில் தேவர் ஜெயந்தி நிகழ்ச்சிக்கான வழித்தடங்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.




















