சென்னை: சரஸ்வதி பூஜையை முன்னிட்டு, சென்னை எஸ்-9 பழவந்தாங்கல் மற்றும் மடிப்பாக்கம் ஆகிய காவல் நிலையங்களில் நேற்று சிறப்பு வழிபாடுகள் வெகு விமரிசையாக நடைபெற்றன. நேற்று மாலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை எஸ்-9 பழவந்தாங்கல் காவல் நிலையத்திலும், அதனைத் தொடர்ந்து இரவு 8:45 மணி முதல் 9:15 மணி வரை மடிப்பாக்கம் காவல் நிலையத்திலும் சரஸ்வதி பூஜை நடைபெற்றது. போலீஸ் நியூஸ் பிளஸ் குடிரிமை நிருபர் திரு.ரமேஷ் அவர்களின் சார்பாக நடைபெற்ற இந்தச் சிறப்பு பூஜைகளை, ரவி பரத்வாஜ் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் குடிரிமை நிருபர் எஸ். சந்திரமௌலி முறைப்படி நடத்தி வைத்தார். இதில் காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பூஜையின் நிறைவாக அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.




















