சென்னை: தமிழக காவல் துறையில் ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 13 உயர் காவல் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே. மணிவாசன் வெளியிட்டுள்ளார். இந்த உத்தரவின்படி, சேலம் மாநகர புதிய காவல் ஆணையர், சென்னை நுண்ணறிவுப் பிரிவு இணை ஆணையர் மற்றும் பல்வேறு மாவட்டங்கள், முக்கியப் பிரிவுகளின் காவல் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.
அதிகாரிகள் மற்றும் புதிய பொறுப்புகள் விவரம்:
சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையராக பணியாற்றி வந்த ஏ.ஜி. பாபு, ஐபிஎஸ் இவர், சேலம் மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் மாநகர காவல் ஆணையராக இருந்த கே. ஜோஷி நிர்மல் குமார், ஐபிஎஸ் இவர் மாற்றப்பட்டு, சென்னை டிஜிபி அலுவலகத்தின் காவல்துறை தலைவர் (நவீனமயமாக்கல்) பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் சரக டிஐஜியாக இருந்த டாக்டர் சந்தோஷ் ஹடிமனி, ஐபிஎஸ் இவர், பெருநகர சென்னை காவல் நுண்ணறிவுப் பிரிவு இணை ஆணையராக (டிஐஜி) நியமிக்கப்பட்டுள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை டிஐஜியாக பணியாற்றி வந்த என். தேவராணி, ஐபிஎஸ் இவர், சேலம் சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். கோவை தீவிரவாத தடுப்புப் பிரிவு எஸ்பியாக இருந்த வி. பத்ரி நாராயணன், ஐபிஎஸ் இவர், சென்னை பெருநகர காவல் அடையாறு துணை ஆணையராக (டிசிபி) நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்டாய காத்திருப்பில் இருந்த ஏ.சி. கார்த்திகேயன் இவர், சென்னை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு (NIB CID) எஸ்பியாக இருந்த என். மதிவாணன் இவர், சென்னை பெருநகர காவல் பரங்கிமலை (St. Thomas Mount) துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை பரங்கிமலை துணை ஆணையராக இருந்த வி.ஆர். சீனிவாசன், ஐபிஎஸ் இவர் மாற்றப்பட்டு, சென்னை போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு (NIB CID) எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய எஸ்பியாக இருந்த கே. ஸ்டாலின் இவர், சென்னை சிபிசிஐடி தெற்கு மண்டல எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை பாதுகாப்புப் பிரிவு துணை ஆணையராக இருந்த பி. சுந்தரவடிவேல், ஐபிஎஸ் இவர், பெருநகர சென்னை காவல் நலன் மற்றும் எஸ்டேட் (Welfare & Estate) துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை வண்ணாரப்பேட்டை துணை ஆணையராக இருந்த டாக்டர் வி. பாஸ்கரன், ஐபிஎஸ் இவர், சேலம் வடக்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் வடக்கு துணை ஆணையராக இருந்த அங்கித் சிங், ஐபிஎஸ் இவர், சென்னை பெருநகர காவல் வண்ணாரப்பேட்டை துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். கட்டாய காத்திருப்பில் இருந்தடாக்டர் ஆர். ஸ்டாலின், ஐபிஎஸ் இவர், சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவு (வடக்கு மண்டலம்) எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த இடமாற்றங்கள் மற்றும் பணி நியமனங்கள் அனைத்தும் உடனடியாக நடைமுறைக்கு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.



















