திண்டுக்கல்: திண்டுக்கல், திருச்சி சாலையில் மதுவிலக்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது ஆட்டோவில் கஞ்சா கடத்தி வந்த சுப்பிரமணி(44). மதன்குமார்(32). மதுபாலன்(31). தாமரைக்கண்ணன்(22). மாதவன்(23). ராஜா(24). ஆகிய 6 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 30 கிலோ கஞ்சா, ஆட்டோ, கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் இன்று மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள் சுப்பிரமணி, மதன்குமார், மதுபாலன், தாமரைக்கண்ணன், மாதவன், ராஜா ஆகிய 6 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















