திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. விஷ்வேஷ் பா. சாஸ்திரி, இ.கா.ப., அவர்கள் பொதுமக்களிடையே அதிகரித்து வரும் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடிகள் குறித்து சைபர் குற்ற விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும், காவல்துறை அல்லது அரசு அதிகாரிகள் போல் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கைது செய்வதாக மிரட்டி பணம் கேட்கும் நபர்களை நம்ப வேண்டாம் என்றும், இது போன்ற மோசடி அழைப்புகள் வந்தால் உடனடியாக காவல்துறையிடம் புகார் தெரிவிக்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.


















