திண்டுக்கல்: திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் நிலைய தலைமைக்காவலர் ராஜகுரு (HC 2244) கைதிகளை மதுரை மத்திய சிறையிலிருந்து அழைத்து சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு, மீண்டும் சிறையில் ஒப்படைக்கும் வழிகாவல் பணியில் ஈடுபட்டிருந்தார். பணி முடிந்து திண்டுக்கல் திரும்புவதற்காக ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்தபோது அவருக்குத் திடீரென வலிப்பு ஏற்பட்டது. உடன் இருந்த காவலர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















