கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த (12). வயது சிறுவனும், காவேரிப்பட்டணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவனும், பெற்றோருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளனர். இதுகுறித்து பெற்றோர்கள் அளித்த புகார்களின் பேரில், சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில், காவல்துறையினர் உடனடியாகத் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு, சிங்காரப்பேட்டையைச் சேர்ந்த சிறுவனை 24 மணி நேரத்திற்குள்ளும், காவேரிப்பட்டணம் பகுதியைச் சேர்ந்த சிறுவனை நேரத்திற்குள்ளும் பத்திரமாக மீட்டு, அவரவர் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
4 மணி இன்று (25.10.2026), கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள். இரு சிறுவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு அழைத்து நேரில் கலந்துரையாடி அறிவுரைகள் வழங்கினார். தொடர்ந்து, சிறுவர்களைப் பெற்றோருடன் நலமுடன் அனுப்பி வைத்தார். குழந்தைகளுடன் பெற்றோர்கள் அன்புடனும் புரிதலுடனும் கலந்துரையாடி, அவர்களின் உணர்வுகளையும் தேவைகளையும் அறிந்து ஆதரவாக இருக்குமாறு கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்



















