கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அன்ஷூல் நாகர், ஐ.பி.எஸ்., அவர்கள் மாவட்ட காவல் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு (SJ&HR), மனிதக் கடத்தல் தடுப்புப் பிரிவு (AHTU) மற்றும் புகைப்படப் பிரிவு ஆகியவற்றில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பிரிவுகளின் செயல்பாடுகள், பராமரிக்கப்படும் ஆவணங்கள் மற்றும் நிலுவைப் பணிகள் குறித்து கேட்டறிந்து, பணிகளை விரைவாகவும் திறம்படவும் மேற்கொள்ள காவல்துறையினருக்கு அறிவுரைகள் வழங்கினார்.




















