திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், ஐ.பி.எஸ்., அவர்களின் உத்தரவின்பேரில், மாவட்டம் முழுவதும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பழனி தாலுகா காவல் நிலையப் பகுதியில் 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், கள்ளிமந்தையம் பகுதியில் கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலைத் தடுக்க மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா



















